search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குனுபூர் பூரி பயணிகள் ரெயில்"

    ஒடிசா மாநிலம் பூரி ரெயில் நிலையத்தில் ரெயில் கழிவறையில் பெண்ணின் தலையில்லா உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்திற்கு செல்லும் குனுபூர்-பூரி பயணிகள் ரெயில் இன்று காலை 6.30 மணியளவில் பூரி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரெயில் கழிவறையில் பெண் ஒருவரின் உடல் தலையில்லாமல் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டறிந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.


    சில மணி நேரங்களுக்கு பிறகு பூரி மாவட்டத்தின் திலாங் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் தலை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் தலை மற்றும் உடலை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மரணத்திற்கான காரணம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்ணை குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. அவரை கொலை செய்து விட்டு கொலையாளி உடலை ரெயிலில் போட்டு சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×